மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 11:37 IST
திருச்சி மாவட்டம் அசூர் பகுதி விவாயிகள் ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட 45 டன் நெல் மூடைகளை அசூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒருவாரம் ஆன நிலையில் ஆட்கள் பற்றாக்குறை, கமிஷன் உள்ளிட்ட காரணங்களால் கொள்முதல் பணிகள் அமை வேகத்தில் நடக்கிறது. நேற்று பெய்த மழையில் மூடைகள் நனைந்தன. விவசாயிகள் தார்பாய் போட்டு மூடியும் தேங்கி்ய நீரால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. குவிக்கப்பட்டுள்ள மீதமுள்ளவற்றை விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
வாசகர் கருத்து