மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 12:38 IST
ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஈஷாவில் உள்ள சிவாங்கா குடிலில் நடந்தது. கிராம மாணவ, மாணவியர் , அவரது பெற்றோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நல்லூர் பதி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி சஜிதா பேசுகையில், “நான் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஈஷா வித்யா பள்ளியில் முழு கல்வி உதவி தொகையில் படித்தேன். தற்போது ஈஷா உதவியால் கல்லூரி படிப்பையும் தொடர்கிறேன் என்றார். முள்ளாங்காடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி பேசுகையில், “எனக்கு அப்பா, அம்மா இல்லை. பெரியம்மாவும், பாட்டியும் தான் என்னை பார்த்து கொள்கிறார்கள். கோவை கலைமகள் கல்லூரியில் படித்து வருகிறேன். ஈஷாவின் உதவி இல்லாமல் நான் படித்திருக்க வாய்ப்பில்லை. ஈஷாவிற்கு நன்றி” என்றார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து