மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 13:35 IST
ஆவின் நிறுவனம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலுக்கு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஆவின் நிலையம் முன் தமிழக விவசாயி சங்கத்தினர் பாலை காய்ச்சி ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கையை வலியுறுத்தினர். தீவனங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து