மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 14:10 IST
திருச்சி மாவட்டம் லால்குடி மகா மாரியம்மன் கோயில் 59 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் போட்டியை தொடங்கி வைத்தார். 600 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. 300 மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. காளையை பிடிக்ககூடாது என காளை உரிமையாளர் மாடுபிடிவிரரை தாக்கியதால் அங்கிருந்த போலீசார் காளை உரிமையாளர்கள் மீது தடியடி நடத்தி வெளியேற்றினர்.
வாசகர் கருத்து