மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 15:19 IST
திருச்சி காஜாமலை பிச்சையம்மாள் நகரில் வசிப்பவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி வயது 72. இவரது மகள் ஆர்த்தி வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர். ஆர்த்தியின் கணவர் ஆனந்தமூர்த்தி வருவாய்துறையில் ஆர்ஐ ஆக உள்ளார். சென்னை ஆனந்தமூர்த்தி விட்டிலும், தர்மபுரி ஆர்த்தி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். திருச்சியில் உள்ள ஆர்த்தியின் தந்தை கலைமணி வீட்டிலும் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் சோதனை நடந்தது. ஆவணங்கள், 2 லட்சம் மதிப்பிலான நகைகளை எடுத்து சென்றனர்.
வாசகர் கருத்து