மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 13:50 IST
கீழ்பூவாணிகுப்பத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன். குறிஞ்சிப்பாடி ஸ்டேஷனில் போலீசாக உள்ளார். புதுவை பகுதியான அருகிலுள்ள கன்னிகோயிலுக்கு வந்து மது குடித்தார். போதை தலைக்கு ஏறி ரகளையில் ஈடுபட்டார். ரோந்து சென்ற போலீசார் ஜனார்த்தனனை கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கும் ரகளையில் ஈடுபட்ட ஜனார்த்தனன், போலீசாரை தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்டார். போலீசார் அவரை குளிப்பாட்டி, போதையை தெளிய வைத்தனர். 3 பிரிவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து