மாவட்ட செய்திகள் ஏப்ரல் 25,2023 | 17:34 IST
நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மேட்டுப்பாளையம் - குன்னூர் - ஊட்டி இடையே மலை ரயிலில் முன்பதிவு செய்து, இயக்கப்படுகிறது. கோடை சீசனுக்காக, தற்போது வார இறுதி நாட்களில், மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அவ்வப்போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தனியாக ரயிலை வாடகைக்கு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயிலில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவியர் 160 பேர் ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர்.
வாசகர் கருத்து