மாவட்ட செய்திகள் மே 09,2023 | 13:53 IST
21 பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்த பக்தர்கள்! மதுரை சித்திரை திருவிழாவையொட்டி தங்கை மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணத்தை காணவும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காகவும் 5 நாள் பயணமாக கடந்த மே 3 ம் தேதி அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். விழாவின் சிகர நிகழ்வாக கடந்த மே 5 ம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ஐந்து நாள் திருவிழா நிறைவு பெற்றதையடுத்து கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர் துாவி அழகரை வரவேற்றனர்.
வாசகர் கருத்து