மாவட்ட செய்திகள் மே 11,2023 | 17:21 IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜாண் ஜெரோம் மிலாடு வயது 62. அரசு பள்ளி ஆசிரியரான தனது மனைவியுடன் ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரை அழகை ரசிக்க சென்றார். கடலில் இறங்கி மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தார். திடீரென ராட்சத அலை இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. கடற்கரையில் நின்றவர்கள் இருவரையும் கடலில் இருந்து மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வாசகர் கருத்து