மாவட்ட செய்திகள் மே 12,2023 | 00:00 IST
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இணைந்து இசைக்குழு நடத்தி வந்தனர் நேற்று இரவு திருச்செந்துார் அருகே நடந்த விழாவில் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் அருமனைக்கு டாட்டா சுமோவில் வந்தனர். இன்று அதிகாலை காவல்கிணறு டு நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், லாயம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மீது கார் மோதியது. இதில் சுமோவில் வந்த அஜித், சதீஷ், சிங் ஆகியோர் ஸ்பாட்டிலேயே இறந்தனர். சுமோ டிரைவர் கண்ணன் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.
வாசகர் கருத்து