மாவட்ட செய்திகள் மே 15,2023 | 13:01 IST
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அன்னையன் வீதியை சேர்ந்தவர் சண்முகராஜ் - பிரேமா ஆகியோரது மகன் பிரவீன் (13). கொடிவேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். சண்முகராஜ் வடக்கு பேட்டையில் மளிகை கடை வைத்துள்ளார் . சண்முகராஜிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரது மகன் பிரவீன் இன்று காலை கடையை திறந்து லைட்டை போட்டுள்ளார். . அப்போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே பிரவீன் இறந்தார். சத்தியமங்கலம் போலீசார் பிரவீன் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து