மாவட்ட செய்திகள் மே 15,2023 | 00:00 IST
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கணபதிபுரத்தை சேர்ந்தவர் முருகன். நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது அலுவலகமும் வீடும் ஒரே கட்டிடத்தில் உள்ளது. கடந்த 12 ம் தேதி குடும்பத்தினருடன் சென்னை சென்றார். இன்று காலை அவரது தந்தை பூதலிங்கம் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. பூதலிங்கம் மகன் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் கூறினார். பீரோவில் இருந்த 100 பவுன் நகை, 6 லட்ச ரூபாய் திருடு போனது தெரிந்தது.
வாசகர் கருத்து