மாவட்ட செய்திகள் மே 17,2023 | 14:26 IST
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட அரசு பள்ளிகள் உள்ளன. மலைப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மலை கிராம மாணவ மாணவியர் பள்ளி படிப்புடன் கல்வியை விட்டு விடுவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் சாதிக்கும் திறனும் பாதியிலே நின்று விடுவதாக தலைமை ஆசிரியர் விளக்கினார். மாணவர்கள் உயர்கல்வி கற்க பெற்றோர் முன்வரவேண்டும் என தலைமை ஆசிரியர் அறிவுறுத்தினார்...
வாசகர் கருத்து