மாவட்ட செய்திகள் மே 18,2023 | 00:00 IST
தமிழகத்தில் 2023- 2024ம் கல்வி ஆண்டிற்கு பள்ளிகள் ஜூன் 3ம் தேதி முதல் செயல்பட உள்ளது. மாணவர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு உறுதி குறித்து கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த வாகனத்தணிக்கையில் பவானி., பருவாச்சி, அந்தியூர்., அம்மாபேட்டை., நெருஞ்சிப்பேட்டை., அத்தாணி., கவுந்தப்பாடி.,கோபி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளின் 500க்கும் சேமற்பட்ட வாகனங்கள் கோபி ஆர்டிஓ வெங்கட்ரமணி தலைமையில் தணிக்கை செய்யப்பட்டது.
வாசகர் கருத்து