மாவட்ட செய்திகள் மே 22,2023 | 17:36 IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் பிளஸ் 1 வகுப்பில் அக்கவுன்டன்சி குரூப் கேட்டனர். பள்ளி நிர்வாகம் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தர மறுத்தது. இதனால் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மார்க் குறைவாக இருந்தாலும் கேட்கும் குரூப் வழங்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. அரசு மேல்நிலைப் பள்ளியில் கற்பித்தல் திறன் குறைவாக இருப்பதால் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டை பெற்றோர்கள் கூறினர். மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாசகர் கருத்து