மாவட்ட செய்திகள் மே 25,2023 | 15:34 IST
தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை, கடந்த 20ம் தேதி பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டார். நாகை எஸ்பியாக பணியாற்றி வந்த ஜவஹர், ஈரோடு எஸ்பியாக மாற்றப்பட்டார். இன்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஜவஹர் பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு மாவட்டத்தில் ரவுடிசத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி மாணவர்களிடையே ஊசி ,மாத்திரை போன்ற போதை பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வாசகர் கருத்து