மாவட்ட செய்திகள் மே 26,2023 | 14:09 IST
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசிவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் முத்திரிபதமிடுதலும், சிறப்பு பணிவிடையும் நடந்தது. கொடி பட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமை பதியை சுற்றிலும் வலம் வந்து திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. திராளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து