மாவட்ட செய்திகள் மே 30,2023 | 12:41 IST
உடுமலை, கொழுமம் ரோடு, ராஜயோக தியான நிலையத்தில், பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு இலவச முகாம் நடந்தது. 100க்கும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு நினைவாற்றல் ஊக்குவிக்கும் பயிற்சி, உடல் ஆரோக்கியத்துக்கான பயிற்சி, தனித்திறன்களை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இயற்கை, புதிய பாரதம் தலைப்புகளில் ஓவியப்போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தியான பயிற்சி நடந்தது.
வாசகர் கருத்து