மாவட்ட செய்திகள் மே 30,2023 | 13:02 IST
உடுமலை அருகே மானுப்பட்டியில், மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில், ரேக்ளா போட்டி நடந்தது. மானுப்பட்டி சாயப்பட்டறை பகுதியில், நடந்த இப்போட்டியில், 200 மீ., மற்றும் 300 மீ., பிரிவுகளில், நுாற்றுக்கணக்கான ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. பந்தய துாரத்தை குறைந்த நேரத்தில் எட்டிப்பிடிக்க, காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியதை பார்வையாளர்கள் ஆர்வமுடன் ரசித்தனர். பல மாவட்டங்களை சேர்ந்த, நுாற்றுக்கணக்கான ரேக்ளா வண்டிகள் போட்டியில் பங்கேற்றன.
வாசகர் கருத்து