மாவட்ட செய்திகள் மே 30,2023 | 00:00 IST
ஈரோடு கோட்டை, வருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் வைகாசி விசாக தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஈஸ்வரன் கோயில் வீதி மணிக்கூண்டு பகுதி , காமராஜர் வீதி வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது.
வாசகர் கருத்து