மாவட்ட செய்திகள் மே 30,2023 | 18:11 IST
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பகுதியில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் ஆரியப்பட்டி, குப்பணம்பட்டி, வாலாந்தூர், வின்னகுடி, நாட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல்நடவு செய்துள்ளனர். இரண்டு வாரத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நேற்று இரவு திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. காற்று சுழன்று வீசிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை சாய்த்து விட்டு சென்றது. விதைநெல், உழவு, விதைப்பு, உரம், கூலி என ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவு செய்து கதிர்கள் பால்பிடிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ள நிலையில் திடீர் காற்றினால் பயிர்கள் சாய்ந்துவிட்டன. அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
வாசகர் கருத்து