மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 20:36 IST
சத்தியமங்கலம் புறநகர் பகுதியில் உள்ள குமாரபாளையம், ஆலத்துக்கோம்பை, சிவியார்பாளையம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் நேந்திரம், கதளி, செவ்வாழை ஆகிய வாழைகளை பயிரிட்டுள்ளனர். இன்று மாலை அடித்த திடீர் சூறாவளி காற்றுக்கு சுமார் 10,000 வாழைகள் சாய்ந்து நாசமானது. விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் முக்கிய சாலையில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புங்கமரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து