மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 00:00 IST
கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் பாரம்பரியமிக்க நாட்டுப்புற கலைகளான பவளக்கொடி கும்மி, வள்ளி கும்மியாட்டம்,சலங்கையாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவை. காலப்போக்கில் அழிந்து வரும் இந்த நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக கோவை மாவட்டம் அன்னூரை பகுதிகளில் இந்த ஆட்டங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த கலைகளை சிறுவர்,சிறுமியர்,பெண்கள்,ஆண்கள் என வயது வித்தியாசமின்றி 100 க்கும் மேற்பட்டோர் கற்று வருகின்றனர். இதன் அரங்கேற்றும் நிகழ்ச்சி காரமடை அருகே உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயிலில் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியாக கிராமிய இசைக்கு ஏற்றவாறு நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது
வாசகர் கருத்து