மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 00:00 IST
கோவை மாவட்டத்தில் ஒரு வாரமாக வெப்ப சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் இடையர்பாளையம், டிவிஎஸ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதற்கு முன்பு சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியத்திற்கு மேல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று மாநகரில், ரயில் நிலையம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், செல்வபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
வாசகர் கருத்து