மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 00:00 IST
சென்னை வியாசர்பாடி பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக தகவல் வந்தது. போலீசார் ரெய்டு சென்றனர். வாகன சோதனையும் நடந்தது. சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு அசோக் பில்லர் சந்திப்பில் பைக்கில் வந்த ஆசாமியை மடக்கி சோதித்தனர். ஆசாமியிடம் 52 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட ஆசாமி அதே பகுதியை சேர்ந்த நேதாஜி என்ற மேதாஜி வயது 24 என்பது தெரிந்தது. வெவ்வேறு மருந்து கடைகளில் சிறிது சிறிதாக மாத்திரை வாங்கி போதைக்கு அடிமையானவர்களிடம் மொத்தமாக விற்பனை செய்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். மேதாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து