மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 13:00 IST
தேனி மாவட்டத்தில் ரைஸ் மில்களில் ரேசன் அரிசி அறைத்து விற்கப்படுவதாக கலெக்டர் ஷஜீவனாவுக்கு புகார் தெரிவி்க்கப்பட்டது. தேனி மாவட்டம் முழுவதும் சோதனைகள் நடந்தன. உத்தமபாளையம் பகுதியில் நடைபெற்ற சோதனையில் க.புதுப்பட்டி நூலகத் தெருவில் உள்ள சையதுஅலி பாத்திமாவின் அரிசி மாவு மில்லில் 9 மூட்டை ரேசன் அரிசியை அரைத்து அடிக்கி வைக்கப்பட்டு இருந்தது. மாவு மூட்டைகளை கைப்பற்றிய சிவில் சப்ளை போலீசார் ரைஸ் மில்லை பூட்டி சீல் வைத்தனர். மாவு மூட்டைகள் உத்தமபாளையம் நுகர்வோர் வாணிபம் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வாசகர் கருத்து