மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 14:17 IST
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தேவராய நேரி நரிக்குறவர் காலனியில் ஸ்ரீஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ணசாமி கோயில் புதிதாக கட்டப்பட்டது. இக்கோயில் நரிக்குறவர் சமுதாயத்தினரின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. கோயிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 8ம் தேதி காலை புனித நீர் எடுத்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். இன்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை மற்றும் 96 வகையான திரவிய ஹோமங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து