மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 17:03 IST
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் அடுத்துள்ள பொடுகம்பட்டி கிராம உள்ளது. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நத்தம் வழியாக திருச்சி - மதுரை இடையே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது பரளிபுதூர் - பொடுகம்பட்டி சாலையை சீரமைக்காமல் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கைவிட்டனர். சாலை அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய சாலை அமைப்பதாக தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் உறுதியளித்தனர். வழக்கம் போல் கண்டுகொள்ளாமல் விட்டதால் கிராம மக்கள் கொதிப்படைந்தனர். சாலையை உடனே அமைக்க வலியுறுத்தி நத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து