மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 18:09 IST
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோடங்கிபாளையம் கிராமத்தில் 30 க்கும் மேற்பட்ட கிரஷர் நிறுவனங்கள் இயங்குகின்றன. ஒடிசா மாநிலம் பக்ரா மாவட்டத்தை சேர்ந்த பபன் சிங் வயது 46, திருநெல்வேலி மாவட்டம் செண்டமங்கலத்தை சேர்ந்த மதியழகன் வயது 47. இருவரும் கல்குவாரியில் வேலை பார்த்தனர். இன்று காலை 5 மணிக்கு வெடி வைப்பதற்கான குழி அமைக்க இருவரும் சென்றனர். ஆனால் ஏற்கனவே வைத்து வெடிக்காமல் இருந்து வெடி திடீரென வெடித்தது. வெடி சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் பார்த்தனர். பபன் சிங் இறந்து கிடந்தார். காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த மதியழகனை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து