மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 18:35 IST
தமிழகத்தில் ஏன், இந்தியாவிலேயே முன் மாதிரியாக இருப்பது கோவை. சொகுசு கார் அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், புதிய திட்டங்கள் தொடங்குவதாக இருந்தாலும், அவை அனைத்தும் கோவையில் தான் தொடங்கப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது புது டிரெண்டிங்காக இருப்பது பேருந்து பயணிகளுக்கான கியூ ஆர் கோடு வசதி. கோவை பேருந்துகளில் உள்ள முக்கிய சிக்கல், சில்லரை பிரச்சினை தான். இந்த பிரச்சினைக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தீர்வு கண்டுள்ளது. இத்தகைய வசதிகளை அனைத்து பேருந்துகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையில் உள்ள சில தனியார் பேருந்துகளில், டிக்கெட் எடுப்பதற்கு செய்யப்பட்டுள்ள கியூ ஆர் கோடு வசதிகள் குறித்து விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.
வாசகர் கருத்து