மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பாறைப்பட்டியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சார்ந்த முத்தாலம்மன், பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் ஜக்கம்மா திருவிழா நடைபெற்றது. சுவாமிகள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியில் திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11 மந்தைகளை சேர்ந்த 400 மாடுகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து