மாவட்ட செய்திகள் செப்டம்பர் 24,2023 | 14:56 IST
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் புகழ் பெற்ற சுவாமிநாதர் கோவில் உள்ளது. அறுபடை வீடுகளில் 4ம் படை வீடான சுவாமிமலை கோவிலுக்குள் நாளை முதல் பக்தர்கள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன்களை பாதுகாக்கும் அறையை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோவில் துணை ஆணையர் உமாதேவி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து