காலை வேளையில் எவ்வாறு சாப்பிட வேண்டும்?

ஒரு நாளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை அதிகளவு அளிப்பதில் காலை உணவு முக்கியப் பங்காற்றுகிறது.

இரவு முழுவதும் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் வயிற்றில் செரிமான அமிலம் அதிகளவில் இருக்கும். எனவே முதலில் தண்ணீர் குடிப்பது மலக்குடலைத் தூண்டி கழிவுகளை வெளியேற்ற உதவும்.


டீ, காபி போன்ற கஃபைன் பானங்களை குடிப்பது செரிமான அமிலத்தின் தாக்கத்தை அதிகரிக்கக்கூடும். எனவே கிரீன் டீ, வாழைப்பழம், அருகம்புல் ஜூஸ், இளநீர், மோர் போன்றவற்றை சாப்பிடலாம்.


காலை உணவை கட்டாயம் சாப்பிட்ட பிறகே மற்ற வேலைகளுக்குச் செல்ல வேண்டும். உலர் திராட்சை, பாதாம், தர்பூசணி போன்றவற்றை காலை உணவுடன் சேர்ப்பது சிறந்தது.


காலை உணவை வயிறு முழுவதுமாக நிரம்பும் வரை சாப்பிட வேண்டும். காலை உணவின் அளவில் 70 சதவீதம் மட்டுமே மதிய உணவாக சாப்பிடவேண்டும்


மதிய உணவில் பாதி அளவே இரவு உணவாக இருக்க வேண்டியது அவசியம். இதனால் செரிமானம் முறையாக நடந்து, சத்துகள் முழுமையாக உடலில் சேரும். மலச்சிக்கல், வாய்வுப் பிடிப்பு போன்றவை ஏற்படாது.


Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...