செரிமானத்தை மேம்படுத்தும் உணவுகள் சில...


இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமானத்தை எளிதாக்கவும், அது தொடர்பான குமட்டல், வாந்தி, வாயு மற்றும் பசியின்மை உட்பட பல்வேறு பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.


செரிமானப் பிரச்னைக்கு உகந்த உணவுகளில் ஒன்றாக முக்கிய இடத்தில் வாழைப்பழம் உள்ளது. இரைப்பை தொடர்பான பிரச்னைகளுக்கு வாழைப்பழங்கள் தீர்வாக உள்ளன.


குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் யோகர்ட் மற்றும் தயிரில் நிறைந்துள்ளன. இது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவும் புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும்.

உலர் விதைகள் மற்றும் கொட்டைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 ஆகியவை குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. அதிகளவில் சேர்த்தால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


ஆப்பிளில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் ஏ, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...