ராகுல் போல் தினமும் டீ அதிகம் குடித்தால் என்ன ஆகும்?

உலகில் பலராலும் விரும்பப்படும் பானங்களில் டீயும் ஒன்று. இன்று க்ரீன் டீ, லெமன் டீ, ஹைபிஸ்கஸ் டீ என விதவிதமாக குடிக்கிறோம்.

டீ குடிப்பதால் நோய் எதிர்ச்சக்தி அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேவேளையில், ஒரு நாளுக்கு 710 மில்லிக்கு மேல் குடிப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் எச்சரிக்கின்றன.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், கடந்த 7ம் தேதி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ' என்கிற பாத யாத்திரையை துவங்கியுள்ளார்.

முதல் நாள் துவங்கி ரோட்டில் ஆங்காங்கே தென்படும் கடைகளில் டீ குடிக்கிறார்; தங்குமிடங்களிலும் டீ குடிக்கிறார். நாள் முழுக்க அதிக டீ குடிப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என பார்ப்போம்.

தேயிலையில் இயற்கையாகவே கேஃபின் உள்ளது. டீ மூலம் அதனை அதிகம் எடுப்பது கவலை, மன அழுத்தம் மற்றும் அமைதியின்மை போன்ற உணர்வை உண்டாக்கும்.

டீ அதிக அளவில் அல்லது வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அதில் உள்ள சில கலவைகள் குமட்டலை ஏற்படுத்தலாம்.

டீயில் உள்ள கேஃபின், தூக்கத்துக்கு தேவையான மெலட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியை பாதிப்பதால், தூக்கமின்மை, சோர்வு, மறதி, கவன குறைபாடு போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

அமில பின்னோட்ட அறிகுறி, அதாவது ஆசிட் ரீப்ளக்ஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு டீயின் கேஃபின் அதனை அதிகப்படுத்தி நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

டீ அல்லது வேறு வகையில் கேஃபினை தொடர்ந்து உட்கொள்ளும் போது அதனை சார்ந்து இருக்கும் நிலையை ஏற்படுத்தும்; தவிர்க்கும்போது தலைவலி, எரிச்சல், சோர்வு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.


இறுதியாக… அளவாக டீயை பருகினால் அது உற்சாக பானம். அளவுக்கு அதிகமாக சென்றால் அது உடலைக் கெடுக்கும் பானம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...