குழந்தைகளை சம்மர் கோச்சிங் கிளாஸ் அனுப்பும் பெற்றோர் கவனத்துக்கு..

சமீபத்தில் எம்.ஐ.டி., ஆய்வாளர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூளைத் திறன் அதிகரிப்பு குறித்து ஆய்வு நடத்தினர்.

ஜாவா போன்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் கோடிங் கோச்சிங் கிளாஸ் அனுப்புவதை விட, இசை கற்க வைப்பது குழந்தைகளின் மூளைத் திறனை அதிகரிக்கக்கூடும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிக இளவயதில் பியானோ, கிடார் உள்ளிட்ட இசைக் கருவிகளைக் கற்ற இசைக் கலைஞர்கள் பலர் பின்னாட்களில் இசை மேதைகளாகியுள்ளனர்.

மேலை நாட்டு இசை, ஹிந்துஸ்தானி, அரபி இசை, கர்நாடக இசை, நாட்டுப்புற இசை என அனைத்துக்கும் இசைக் குறிப்புகள் உள்ளன.

இவை ஓர் சிக்கலான கணிதப் புதிர் போன்று இருக்கும். 'மியூசிக் தியரி' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதனை நன்றாகக் கற்றுத் தேர்ந்தால் எந்த ஒரு இசைக் கருவியையும் திறம்பட வாசிக்கலாம்.

பள்ளிக் கல்வியுடன் இசை கற்பது மூளைத் திறனை அதிகரிப்பது மட்டுமின்றி எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஓர் புதிய தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்தித்தரும்.


கோடை விடுமுறை காலத்தில் பள்ளி செல்லும் பத்து வயதுகுட்பட்ட குழந்தைகளை இசைப் பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுவது நல்லது என்பது ஆய்வாளர்களின் அட்வைஸ் ஆகும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...