மனதை வருடும் குந்தவையின் கலர்புல் கலெக்ஷன்

பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குந்தவையின்... அதாங்க நம்ம திரிஷா மீதான எதிர்பார்ப்பும் குறையாமலே உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் கோலோச்சி வருபவர் திரிஷா. விக்ரமின் சாமி படத்தில் மாமியாக வந்த இவர், விஜய்யின் கில்லி படத்தில் தனலட்சுமியாக அனைவரிடமும் ஒட்டிக்கொண்டார்.

தடுமாறிய நேரத்தில் '96' படத்தில் 'ஜானு'வாக மீண்டும் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார்.


தொடர்ந்து நடித்த படங்கள் கைக்கொடுக்காத நேரத்தில், பொன்னியின் செல்வனில் இவரின் மீது அனைவருக்கும் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. குறிப்பாக ஆடைகள் அனைவரையும் கவர்ந்துள்ளது என்றால் மறுப்பதற்கு இல்லை.

சோழர் கால உடை, ஆபரணங்களில் திரிஷாவின் தோற்றம் அனைவரையும் கட்டிப்போட்டுள்ளது. வெள்ளித்திரையில் முழுக்கதையையும் எப்போது பார்ப்போம் என பலரும் ஏக்கத்தில் உள்ளனர்.

இதற்கேற்ப பட டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிலும் வண்ணமயமான புடவையில் எளிமையான மேக்கப்பில், நெக்லஸ், நெத்திச்சுட்டி என பார்ப்பவர்களின் பார்வையை வெகுவாக ஈர்த்துள்ளார்.

பட பிரமோஷன் உட்பட பல விழாக்களிலும் அழகிய கலர்புல்லான உடைகளில் பலரையும் வசீகரித்து வருகிறார்.

சல்வார், குர்த்தீ என திரிஷாவின் ஆர்பாட்டமில்லாத இந்த உடைகளைப் போல், கல்லூரி மாணவிகள் கடைகளில் தேடி அலைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...