இந்தியாவில் பார்க்க வேண்டிய அழகிய நீர்வீழ்ச்சிகள் சில...!

கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். பசுமையான பள்ளத்தாக்குகளின் மீது 829 அடி உயரத்தில் இருந்து ஆர்பரித்து கொட்டுகிறது இந்த நீர்வீழ்ச்சி.

கேரளாவில் இயற்கை எழிலுடன் கூடிய அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி 'இந்தியாவின் நயாகரா' என அழைக்கப்படுகிறது. அழகிய சாரல், கொட்டும் அருவி என கவர்ந்திழுப்பதால், இங்கு பட'சூட்டிங்'கள் அடிக்கடி நடக்கிறது.


மேகாலயாவின், சிரபுஞ்சியில் உள்ள நொகாலிகாய் நீர்வீழ்ச்சி, பச்சைப்பசேலென அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, 1,100 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவது பார்ப்போரை ஒருகணம் மூச்சடைக்க வைக்கும்.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ளது குற்றாலம் நீர்வீழ்ச்சி. தண்ணீரில் உள்ள மூலிகைகளின் மருத்துவத்தன்மை காரணமாக, 'மருத்துவ ஸ்பா' என அழைக்கப்படுகிறது.

கோவாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கம்பீரமாக உள்ள துத்சாகர் நீர்வீழ்ச்சியில் 1, 017 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாகும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...