உங்களின் அழகிய கூந்தலை எளிதாக பராமரிக்க...!

புரதம், இரும்பு, வைட்டமின் சி, ஒமேகா 3, நார்சத்து போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது கூந்தலின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூந்தலின் நுனிப்பகுதியை வெட்டி விட வேண்டும். குறைந்தபட்சமாக 1/4 இன்ச் அளவாவது கூந்தலை வெட்டலாம்.

தலைக்கு குளித்தவுடன் ஈரமான கூந்தலுடன் தூங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

கூந்தலை ஸ்ரெய்ட்டனிங் செய்ய, அடிக்கடி வெப்பக் கருவிகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தும் போது இயற்கைத் தன்மை பராமரிக்கப்படுகிறது.

ஹேர் டிரையரை பயன்படுத்தும் போது படிப்படியாக வெப்பத்தின் அளவை அதிகரிப்பது முக்கியமானது. முடிந்தவரை காற்றில் உலர வைக்க முன்வரலாம்.'

உச்சந்தலையை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்யலாம்.

வாரம் ஒரு முறையாவது கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தடவ வேண்டும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...