அணு ஆயுத போரின் போது கண்டிஷனர்கள் பயன்படுத்த கூடாது. ஏன் தெரியுமா?

சாதாரண நாட்களில், தலைமுடியை ஷாம்பூ, கண்டிஷனர்கள் பயன்படுத்தி தூய்மை செய்து பாதுகாக்கலாம். அணு ஆயுத போர் வெடிக்கும் சமயங்களில் ஷாம்பூ உயிரை காப்பாற்றும்.

கண்டிஷனர்கள் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தானதாக மாறும். அணு ஆயுத வெடிப்பின் போது, ஏன் கண்டிஷனர் பயன்படுத்த கூடாதென்று பார்ப்போம்.

அணு வெடிப்பு ஏற்பட்டால் மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது.

ஒரு அணு ஆயுத வெடிப்பின் போது, மேகங்களில், காற்றில் கதிரியக்க தூசி படிந்திருக்கும். அதில் இருந்து தப்பிக்க, நீங்கள் முடிந்தளவுக்கு விரைவாக குளியல் போட வேண்டும்.


கதிரியக்கத்தால் அசுத்தமான ஆடைகளை கழற்றிவிட்டு குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஷாம்பூகள் தலைமுடியில் எண்ணெய் மற்றும் அழுக்குகளை, அழுக்குத் துகள்களை எடுத்துச் செல்லும் வகையில் உள்ளதால், ஒரு ஷாம்பூ உங்கள் உயிரைக் காப்பாற்றும்.

கண்டிஷனர்களில் உள்ள சர்பாக்டான்ட்களின் பண்புகள் (ஒரு முனையில் தண்ணீரையும் மறுமுனையில் எண்ணெயையும் ஈர்க்கும்) மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.


அது உங்கள் தலைமுடிக்கும் கதிரியக்கப் பொருட்களுக்கும் இடையில் ஒரு பசை போல் செயல்படும். எனவே கதிர்வீச்சு வெளிப்பாட்டைத் தடுக்க, கண்டிஷனரைப் தவிர்க்கவும்.

அணு வெடிப்பின் போது, கதிர்வீச்சு பாதிப்பை தவிர்க்க செங்கல், கான்கிரீட் கட்டடத்துக்குள் தங்க வேண்டும். கண்கள், மூக்கு, வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...