பிரேக்பாஸ்ட்டுக்கு வண்ணமயமான சாமை தோசை

தற்போது பலரும் ஆரோக்கியத்தை மேம்படுத்த கம்பு, ராகி, சோளம், சாமை என பாரம்பரிய தானியங்களையும் உணவில் சேர்க்கத் துவங்கியுள்ளனர்.

எனவே, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சாமை தோசை செய்யும் வழிமுறை இதோ... .

சாமை அரிசி மற்றும் சாதாரண அரிசியை நன்றாகக் கழுவி முதல் நாள் இரவு ஊறவைக்கவும்.

மறுநாள் காலையில் நறுக்கிய புடலங்காய், வெல்லம், சீரகம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி வெங்காயம், முருங்கைக்கீரை பொடி, சமைத்த சாதம் சேர்த்து மாவு பதத்துக்கு அரைக்கவும்.

தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்க்கவும். அரைத்த மாவில் சிறிது வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. அரைத்த உடனேயே தோசை வார்க்கலாம்.

சாமை அரிசியுடன் சாதாரண அரிசிக்கு பதிலாக கவுனி அரிசி போன்ற பாரம்பரிய வகைகளை சேர்க்கலாம். காலை பிரேக்பாஸ்ட்டுக்கு ஏற்ற உணவு இது.
Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...