குழந்தைகளுக்கு எந்த வயதில் ஸ்மார்ட்போன் வாங்கித் தரலாம் ?

இன்றைய நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில், வயது வரம்பின்றி அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோராக மாறி வருகின்றனர்.

குறிப்பாக, குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துக் காணப்படுகிறது. அதனால் உளவியல் ரீதியான பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

குழந்தைகளை கண்காணிக்க கட்டுப்பாடுகள் இருந்தாலும், இணைய வசதியுடன் கூடிய போன் மூலம் இணையத்தில் அனைத்துப் பகுதிகளையும் அணுக முடியும்.

சமூக வலைதளங்களில் போலி கணக்குகளில் சில மோசடி ஆசாமிகள் உலாவருவதால், பாலியல் ரீதியான பிரச்னைகள், பணம் கேட்டு மிரட்டல் போன்ற ஆபத்துகளுக்கு வழிவகுக்கிறது.

சென்ட்ரல் இன்புளுயன்ஸ் அமைப்பின் ஆய்வில், குழந்தைப் பருவத்தில் மொபைல்போன் பயன்படுத்துவோரின் சராசரி வயது 10.3 எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர்.

குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு என சரியான வயது வரம்பு இதுவரையிலும் வரையறுக்கப்படவில்லை. ஒவ்வொரு குழந்தையின் அறிவு, பகுத்தறியும் திறன் வேறுபடும்.

எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளால், இந்த உண்மையான உலகத்தைச் சமாளிக்க எப்பொழுது முடியும் என்று எண்ணுகிறார்களோ, அப்போது அவர்களுக்கு அதை வழங்கலாம்.

பெரும்பாலும் எட்டாம் வகுப்பிற்கு மேல், குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவது சரியானதாக இருக்குமென ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...