வானவில் மலை.. ஆச்சரியத்தில் சுற்றுலா பயணிகள் !

பசுமையான, பனிப்படர்ந்த மலைத்தொடர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வானவில் மலைத்தொடர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வியப்பாக இருப்பினும் இது உண்மை

பெரு நாட்டின் கஸ்கோ பகுதிக்கு மிக அருகே உள்ளது வினிகுன்கா மலைகள். இவை வானவில் மலைகள் எனப்படுகின்றன. 2013ம் ஆண்டு வரை மற்ற மலைகளைப் போன்றுதான் இவைகளும் காணப்பட்டன.

ஆனால், மலைகளின் மீதுள்ள பனி மொத்தமாக உருகி, இந்த மலையில் உள்ள பல்வேறு தாதுக்களில் மழைத்தண்ணீர் கலக்கும்போது அவை வண்ணமயமாக மாறுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது கடல் மட்டத்திலிருந்து ஐந்தாயிரம் மீட்டருக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது. தங்கம், நீலம், கருப்பு என பல வண்ணங்களில் பரவிக்கிடக்கும் இந்த மண்ணில் 14 வகையான கனிமங்கள் உள்ளன.


இந்த அதிசய மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால், மலையின் அருகே வசிக்கும் கிராம மக்கள், வழிகாட்டிகளாக மாறிவிட்டனர்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வழி தவறிவிட்டால் ஆபத்தான பாதைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. அதனால் கீழிருந்து மலைமீது துணையில்லாமல் ஏற முடியாது.


இந்த மலைப்பகுதியின் மற்றொரு அதிசயம் இங்கு நிலவும் காலநிலை. கோடை காலத்தில்கூட நொடியில் வானிலை மாறி, அடுத்த நிமிடமே மழை பெய்யும்; அதனைத்தொடர்ந்து குளிர் நிலவும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...