கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் இனிதே நடந்தது

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

நடிகை மஞ்சிமா மோகன் சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

‛தேவராட்டம்' படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனுக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது.

மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் தங்களது காதலை அறிவித்தனர்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது திருமணம் பற்றி அறிவித்து வாழ்த்து பெற்றனர்.

இவர்களின் திருமணம் சென்னையில் இன்று(நவ., 28) எளிய முறையில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடந்தது.

திருமணத்தின் போது கவுதம் பட்டு, வேஷ்டி சட்டையையும், ஐவரி நிறத்திலான பட்டுப்புடவையை மஞ்சிமாவும் அணிந்து இருந்தனர்.

திருமணம் செய்த மணமக்களை திரையுலகினர்கள், ரசிகர்கள் வாழ்த்தினர்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...