கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும் கறிவேப்பிலை!

முடி உதிர்வை கட்டுபத்தும் ஒரு பொருள் என்றால் அது கறிவேப்பிலைதான். கறிவேப்பிலையின் பயன் அறிந்தால் அதை யாரும் ஒதுக்கி வைக்க மாட்டார்கள் என கூறலாம்.

கறிவேப்பிலை ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதம் நிறைந்தது. இதில் உள்ள வைட்டமின் பி கூந்தல் நரைப்பதை தடுக்கும்.

அதுமட்டுமல்ல முடி உதிர்வு, பொடுகுத் தொல்லை, உச்சந்தலை அரிப்பு என தலைக்கு ஏற்படும் பல பிரச்னைகளை போக்கும் சிறந்த டானிக் போன்று செயல்படும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் ஒரு கப் தயிர் ஆகியவற்றை ஒரு மிக்சியில் சேர்த்து பேஸ்ட் போல் அரைக்கவும்.

அதை கூந்தல் முழுவதும் தடவவும். 30 முதல் 40 நிமிடங்கள் ஊறவிட்டு, வெது வெதுப்பான நீரில் குளிக்கவும். கூந்தல், மென்மையாகவும், பளபளவென்றும் காட்சி அளிக்கும்.

வெங்காயம் முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த மருந்து. கால்சியம், வைட்டமின் பி6, சி, சல்ஃபர் போன்ற சத்துக்கள் நிறைந்தது.

அரை கப் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை எடுத்து மிக்சியில் அடித்து, துணியில் வடிக்கட்டவும்.

அந்த ஜூசை, சின்ன பஞ்சை கொண்டு நனைத்து கூந்தல் வேர்களில் தடவவும். பின் 30 நிமிடங்கள் அப்படியே ஊறவைக்கவும். வெங்காய நாற்றம் பிடிக்காதவர்கள் ஷாம்பூ கொண்டு குளிக்கலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...