ஹோட்டல் ஸ்டைலில் சுவையான ஒரு மட்டன் கிரேவி !

ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, குருமிளகு, கசகசா, ஏலக்காய், பட்டை, சீரகம், சோம்பு, புதினா ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.


அடுப்பில் குக்கரை வைத்து சூடானவுடன், சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.


பின்னர், நறுக்கிய பெரிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் அரைத்த மசாலா கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், நறுக்கியத் தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை மிதமான தணலில் நன்றாக வதக்க வேண்டும்.

கலவையில் எண்ணெய் பிரியத்துவங்கும் போது, மட்டன் துண்டுகளைச் சேர்க்கவும். ஒரு சில நிமிடங்கள் நன்றாக வதங்கிய பின்னர், கால் கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கலக்கி மூடி வைக்கவும்.

நான்கைந்து விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடலாம். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து கலவையை நன்றாக கலக்கி விட்டு, நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவினால் மட்டன் கிரேவி ரெடி.


கூடுதலாக சில நிமிடங்கள் வேகவிட்டால் மட்டன் ஃபிரை ஆக பயன்படுத்தலாம். மட்டன் குழம்பாக சாப்பிட விரும்புபவர்கள், வேக வைக்கும் முன் கூடுதலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...