50 பிளஸிலும் வேற லெவலில் அசத்தும் சீதா !
ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சீதா, 80களின் முன்னணி நடிகைகளில் ஒருவர். துவக்கத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து நடித்தாலும், புடவையில் பலத்த வரவேற்பு கிடைத்தது அவருக்கு.
தொடர்ந்து பல படங்களில் நடித்த சீதா, இயக்குனரும், நடிகருமான பார்த்திபனை காதல் திருமணம் புரிந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
தற்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பைத் தொடரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பிஸியாக உள்ள இவர், ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.
குறிப்பாக, இவரின் மாடித்தோட்டம் குறித்த பதிவுகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்; செடிகளை வளர்ப்பது குறித்த டிப்ஸ்களையும் அவ்வப்போது வழங்குவார்.
இந்நிலையில், மாடர்ன் புடவையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சீதா. அதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், லெக்கின்ஸ், புடவை அணிந்து ஸ்டைலிஷாக காட்சியளிக்கிறார்.
தற்போதைய டிரெண்டுக்கேற்ப புடவைக்கு மேட்சிங்காக ஓவர்கோட், அழகிய சந்த்பாலி காதணிகள், வளையல்கள் மற்றும் இடுப்பில் ஒட்டியாணம் என அலங்காரப்பட்டியல் நீள்கிறது.
மெகா சைஸ் காதணி அணியும் போது பலரும் கழுத்தில் நெக்லஸை தவிர்ப்பதே இப்போதைய பேஷன்; அதற்கேற்ப சீதாவும் படு ஸ்டைலாக போஸ் கொடுத்து டிரெண்டிங்கில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
50 பிளஸிலும் வேற லெவலில் அசத்தும் சீதாவின் இந்த புகைப்படங்களை பலரும் வைரலாக்கி வருகின்றனர்.