செலீனியம் உள்ள ஐந்து உணவு வகைகள் இவை
உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்களில் முக்கியமான ஒன்று செலீனியம் (selenium). இது தைராய்டு பிரச்னை, மன அழுத்தம், இதயநோய், புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
நேஷனல் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஹெல்த் அறிக்கையின்படி, தினமும் குறைந்தபட்சம் 55 மைக்ரோகிராம் அளவுக்கு செலீனியம் உடலுக்குத் தேவைப்படுவதால், செலீனியம் நிறைந்த சில உணவுகளைப் பார்க்கலாம்.
100 கிராம் அளவு பிரேசில் நட்ஸில் 544.5 மைக்ரோ கிராம் அளவுக்கு செலீனியிம் நிறைந்துள்ளது. இது உங்களுடைய தினசரி தேவையில் கிட்டதட்ட 990 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நூறு கிராம் காளானில் 11.9 மைக்ரோ கிராம் செலீனியம் உள்ளது. தினசரி அளவில் இது 17 சதவீதம். இதில், நியசின், காப்பர், பொட்டாசியம், வைட்டமின் டி மற்றும் சி உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
முட்டையில் அதிகப்படியான புரதம் உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு முட்டையில் 15 மைக்ரோ கிராம் செலீனியம் நிறைந்துள்ளது. தினசரி தேவையில் 21 சதவீதம் இந்த அளவு.
100 கிராம் சால்மன் மீனில் 41.4 மைக்ரோ கிராம் செலீனியம் உள்ளது. கலோரிகள் இல்லாத இந்த மீனில் குறைந்தளவு கார்போஹைட்ரேட், அதிகளவில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
100 கிராம் சீஸில் 20 சதவீத செலீனியம் உடலுக்கு கிடைக்கிறது. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின் ஏ உட்பட பல்வேறு சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.