எவரெஸ்ட் பேஸ் கேம்ப் டிரெக்கிங்... திட்டமிடுவது எப்படி?

'வாழ்நாளில் ஒரு முறையாவது, எப்படியாவது உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் ஏறியே ஆகணும்' என்பது பலரது தீராக் கனவு. ஆண், பெண் பாகுபாடின்றி முயற்சிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று.

அதிசயம், அழகு, மர்மம் என பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய எவரெஸ்ட் சிகரம், உலகம் முழுவதிலுமிருந்து சாகச விரும்பிகளை தன்பக்கம் வெகுவாக ஈர்க்கிறது.

முன்பு கடினமான மலையேறுபவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமான களமாக இருந்தது. இன்றோ, எவரெஸ்ட் சிகரத்தின் கம்பீரமான அழகை, அடிப்படை முகாமுக்கு சென்றால் அனைவரும் அனுபவிக்கலாம்.

மலையேறுபவர்களுக்காக எவரெஸ்ட் பேஸ் கேம்ப் மலையேற்றம் (base camp trek) மார்ச் முதல் மே வரையும், செப்., முதல் டிச., வரையும் அனுமதிக்கப்படுகிறது.

வெப்பநிலை குளிர்ச்சியாக இருப்பதால், உங்களால் குளிரைத் தாங்க முடிந்தால் 2வது சீசனில் செல்வது சிறப்பானது. அதேவேளையில் கோடையில் அழகிய பூக்கள் பூத்துக் குலுங்குவதை ரசிக்கலாம்.

ஒருசில நாட்களில் செல்ல விரும்பினால் திபெத்தில் இருந்து, எவரெஸ்ட் சிகரத்தின் வடக்கு பேஸ் கேம்ப் வழித்தடத்தில் வரலாம். அழகிய காட்சிகளுக்கு பெயர் போனது இந்த வடக்கு முகாம்.

எவரெஸ்ட் சவுத் சைட் பேஸ் கேம்ப் மிகவும் பிரபலமான மலையேறுபவர்களின் அடிப்படை முகாம். குறைந்தப்பட்சமாக 16 நாட்கள் வரை பயணிக்க வேண்டும்; நெடிய மலைத்தொடர்களின் அழகை ரசிக்கலாம்.

மலையேற்ற விரும்பிகளுக்கானது இந்த எவரெஸ்ட் அடிப்படை முகாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனிப்போர்வை போர்த்திய மலைகளின் அழகு உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வாயடைக்கச் செய்யும்.

எவரெஸ்ட் பேஸ் கேம்ப் செல்லும் முன்பு கட்டாயமாக கொஞ்சம் உடற்பயிற்சி தேவைப்படுகிறது. இதய ஆரோக்கியம், சகிப்புத்தன்மை மற்றும் வலிமை ஆகியவற்றுக்கு உங்களை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும்.

உங்கள் மலையேற்றம் வெற்றிகரமாக இருக்க மலையேற்றத்தை மெதுவாக துவக்கி, படிப்படியாக வேகமெடுத்தால் எளிதில் சோர்வடைய மாட்டீர்கள். நீரேற்றமாக இருப்பதும், மிகவும் முக்கியமானது.


சைவ உணவுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்; தூக்கமும் அவசியமானது என்பதால், மலையேற்றத்துக்கு முன்னர் போதுமான அளவு தூங்கினால், மட்டுமே புத்துணர்ச்சியுடன் வீறுநடை போட முடியும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...