அழகிய கைகளுக்கான அசத்தல் டிப்ஸ்

தினமும் ஓரிரு முறை கைகளை நன்றாக கழுவிய பின் தரமான ஹேண்ட் மாய்ஸ்சரைசர் தடவவும். கோடைக்காலம், குளிர்காலம் என அந்தந்த சீசனுக்கேற்ப மாய்ஸ்சரைசர் கிரீமைப் பயன்படுத்த வேண்டும்.

குளிர்காலத்தில் சருமம் எளிதாக வறண்டு விடும் என்பதால், கூடுதல் கவனம் தேவை. மாதம் ஒரு முறையாவது மெனிக்யூர் செய்ய வேண்டும். இதனால், சருமத்துக்கு முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கக்கூடும்.

கைகளை கழுவ அவ்வப்போது வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துங்கள். அதிக சூடான அல்லது குளிர்ச்சியான தண்ணீர் சருமத்தை பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளது.


இரவில் தூங்கும் முன் உங்கள் கைகளை குறைந்தப்பட்சமாக ஐந்து நிமிடங்களுக்காவது மசாஜ் செய்யவும். மாய்ஸ்சரைசரின் உதவியுடன் மசாஜ் செய்யும் போது, வாஸலைனையும் சேர்க்கலாம்.


வாரத்துக்கு இருமுறை இரவில் தூங்கும் முன் கைகளில் சில துளிகள் கிளிசரின் தடவி, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வர, நாளடைவில் கைகளில் மிருதுத்தன்மையை உணரலாம்.

தோட்டத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது போன்ற கடினமான பணிகளை செய்யும் போது, முடிந்தளவு ரப்பர் கையுறைகளை அணியுங்கள். இதனால், வீண் பாதிப்புகளில் இருந்து கைகளை பாதுகாக்கலாம்.

சருமப் பராமரிப்புக்கு சத்தான உணவுகளும் அவசியமானது. ஆரோக்கியமான, வலுவான நகங்களை பெறவும், கைகளை மிருதுவாக வைத்திருக்கவும், புரதம், வைட்டமின் பி மற்றும் ஈ உள்ள உணவுகளை சாப்பிடலாம்.


Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...